தளபதி 69 படத்தை 100 கோடி கொடுத்து வாங்கப்போகும் முன்னணி நிறுவனம்.. அடேங்கப்பா

24 6729f86c5193c 15

தளபதி 69 படத்தை 100 கோடி கொடுத்து வாங்கப்போகும் முன்னணி நிறுவனம்.. அடேங்கப்பா

தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அதனால் தன்னுடைய கடைசி படமாக தளபதி 69-ஐ அறிவித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தளபதி 69 படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வியாபாரத்தையும் படக்குழு துவங்கிவிட்டது.

இப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ. 78 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சில நாட்களில் முன் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், தளபதி 69 படத்தின் தமிழக உரிமை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் தமிழக உரிமையை ரூ. 100 கோடி கொடுத்து வாங்குவதற்காக 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாராக உள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் தான் தயாரித்து இருந்தார். மேலும் வாரிசு படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்ததும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version