விஜய் சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்.. அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா
தளபதி விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் சினிமாவில் இருந்து விலகவுள்ளார். தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது. ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கப்போகிறார் என உறுதியாக கூறப்படும் நிலையில், தயாரிப்பாளர் யார் என்று இதுவரை தெரியவில்லை.
தெலுங்கு தயாரிப்பாளரான DVV entertainment இப்படத்தை தயாரிக்க முன் வந்தனர். ஒரு கட்டத்தில் அனைத்தும் தயாராக இருந்த நிலையில், படத்தை அறிவிப்பதற்கு முன்பே படத்தின் பிசினஸை தயாரிப்பாளர் துவங்கிவிட்டார் என கோபப்பட்டு இந்த தயாரிப்பு நிறுவனம் வேண்டாம் என விஜய் முடிவு செய்ததாக சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், தளபதி 69 படத்திலிருந்து DVV entertainment நிறுவனம் வெளியேற விஜய்யின் சம்பளம் தான் காரணம் என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
விஜய் தற்போது நடித்து வரும் Goat திரைப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் தளபதி 69 படத்திற்காக DVV entertainment நிறுவனத்திடம் ரூ. 250 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
முதலில் சம்பளம் குறித்து விஜய்யிடம் பேசிப்பார்களாம் என தயாரிப்பாளர் எண்ணியுள்ளார். ஆனால், சம்பள விஷயத்தில் விஜய் இறங்கி வராததால் DVV entertainment இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என பிஸ்மி தெரிவித்துள்ளார்.