தளபதி 69 திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதா! ரசிகர்கள் அதிர்ச்சி

24 666a7d2f882bd

தளபதி 69 திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதா! ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபின் தனது தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கவுள்ள நிலையில், தயாரிப்பாளர் யார் என இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. இந்த சூழலில் தளபதி 69 திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டது என்றும், GOAT படத்தை முடித்த கையோடு அரசியலில் களமிறங்கவுள்ளார் விஜய் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அது உண்மையில்லை தளபதி 69 திரைப்படம் ட்ராப் கிடையாது. அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும், இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தளபதி 69 படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகவுள்ளது என்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தபின் தான் முழுமையாக அரசியலில் விஜய் களமிறங்கவுள்ளார் என உறுதியாக கூறப்படுகிறது.

Exit mobile version