tamilni 105 scaled
சினிமாசெய்திகள்

கணவரை பிரிந்தாரா இளையராஜா மகள் பவதாரிணி? உண்மையில் நடந்தது என்ன

Share

கணவரை பிரிந்தாரா இளையராஜா மகள் பவதாரிணி? உண்மையில் நடந்தது என்ன

இளையராஜா மகள் பவதாரிணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் கணவர் சபரியிடம் இருந்து பிரிந்து விட்டதாக வெளியான தகவலுக்கு ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி(47) புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்நிலையில் பவதாரிணியும், அவரது கணவர் சபரியும் பிரிந்து விட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், ஜெயந்தி கண்ணப்பன் வாவ் தமிழா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், பவதாரிணியும், சபரியும் உண்மையில் பிரியவில்லை. அவர்கள் ஆத்மார்த்தமான தம்பதிகளாகவே இருந்தனர். பவதாரிணி இலங்கைக்கு செல்லவே இல்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகுகின்றன. இது உண்மையே இல்லை, இதற்கு அவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற தேவையே இல்லை என்று ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பவதாரிணியின் மறைவால் சபரி மிகப்பெரிய தூக்கத்தில் உள்ளார், அவர் அனைவரையும் மாதிரி வெளிப்படையாக அழுது தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட தெரியாதவர்.

பவதாரிணியின் இறப்பு செய்தியை கேட்டு சபரி அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டார். பவதாரணி திருமணம் ஆன பிறகு சபரியுடன் தான் இருந்தார், தம்பதி தேவையில்லாமல் இளையராஜா வீட்டிற்கு கூட வருவது இல்லை. சபரி ஒருபோதும் பவதாரிணியை விட்டுக் கொடுக்க மாட்டார்.

அவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பவதாரிணிக்கு நானும், அவரது அம்மாவும் தான் மாப்பிள்ளை தேடினோம், ஆனால் வருகின்ற வரன் எதுவும் பவதாரிணிக்கு பிடிக்கவில்லை.

அப்போது தான் செங்கல்பட்டு அருகே உள்ள கன்னி கோவிலுக்கு சென்று வந்தால் நல்ல வரன் அமையும் என தெரியவந்தது, உடனே இருவரும் அங்கு சென்று வந்தோம்.

அடுத்தவாரமே மதுரை சேர்ந்த சபரியின் வரன் அமைந்து, இருவருக்கும் திருமணம் முடிவானது, பவதாரிணி திருமணத்திற்காக ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியுடன் கூடி இருந்தது.

கடந்த 2005ம் ஆண்டு பவதாரணி, பத்திரிகை அதிபர் எஸ்.என்.ராமச்சந்திரன் மகன் சபரி ராஜை காதலித்து கரம் பிடித்ததாகவும் செய்திகள் உள்ளன என நேர்காணலில் ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...