சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம் என்றால் சொல்லவே தேவையில்லை. ஒரு சிலர் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பின் அந்த காதலை உறுதி செய்து திருமணம் செய்துகொள்கின்றனர்.
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகள் சிலர் தொழிலதிபர்களை திருமணம் செய்துகொண்டனர். ஆனால், பிரபல மூத்த நடிகை ஒருவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை நடிகை சுஷ்மிதா சென் தான். தனது திரை வாழ்க்கையில் பல வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளார். 50 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை சுஷ்மிதா சென், கிட்டத்தட்ட 12 பிரபலங்களுடன் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது.
ரகுமான் சால், ரன்தீப் ஹூடா, விக்ரம் பட் உள்ளிட்ட 12 பிரபலங்களுடன் இவர் டேட்டிங் செய்து வந்ததாக தகவல்கள் பரவி வருகிறது. சமீபத்தில் லலித் மோடியுடனும் இவர் டேட்டிங் செய்ததாகவும், ஆனால் தற்போது பிரிந்துவிட்டதாக கூறுகின்றனர். தன்னை காட்டியும் இளைவர்களுடனும் கூட சுஷ்மிதா டேட்டிங் சென்றுள்ளார் என்று கூட பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு உண்டு.
நடிகை சுஷ்மிதா சென் சுதந்திர சிந்தனையுள்ள நடிகையாம். திருமணம் என்பது அவரது எண்ணத்தில் இல்லை என்கின்றனர். டேட்டிங்கிலேயே தனது காலத்தை கழித்து வந்த நடிகை சுஷ்மிதா சென், இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.