சினிமாசெய்திகள்

’சூர்யா 44’ படத்தை இயக்கும் மாஸ் இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

surya44 6605706874631
Share

’சூர்யா 44’ படத்தை இயக்கும் மாஸ் இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை மாஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கங்குவா’ படத்திற்கு பின்னர் சூர்யா, சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் ’புறநானூறு’ என்ற படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் சூர்யா மற்றும் சுதா கொங்காரா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்றும் கூறப்பட்டது.

அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கும் நிலையில் இந்த படமும் இப்போதைக்கு தொடர்வதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக ’கர்ணா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கும் நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளன என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து விஜய்யின் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் ஏற்கனவே ரஜினிகாந்த், விக்ரம், விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களை இயக்கிய நிலையில் தற்போது அடுத்ததாக சூர்யா படத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...