சூர்யா – சுதா கொங்கரா படம் டிராப்பா? திரைக்கதையில் தலையிட்டதால் கடுப்பான இயக்குநர்..!
சூர்யா நடித்து முடித்துள்ள ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் தான் நடிப்பார் என்றும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. மதுரையை சுற்றி நடக்கும் கதை என்பதால் மதுரையில் தான் முதல் கட்ட படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் திடீரென சமீபத்தில் சுதா கொங்கரா வெளியிட்ட அறிக்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும் என்றும் இன்னும் எங்களுக்கு அவகாசம் தேவை என்று கூறியதை அடுத்து இந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்று கூறப்படுகிறது.
சுதா கொங்கரா தனது உதவி இயக்குநர்களுடன் இந்த படத்தின் கதை விவாதத்தில் இருந்த போது சூர்யா அங்கு வந்து கதையில் தலையிட்டதாகவும் தனக்கான சில காட்சிகள் இந்த படத்தில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ’சூரரைப்போற்று’ படத்தின் திரைக்கதையில் சூர்யா குறுக்கிட்டதால் பல மாற்றங்கள் நிகழ்ந்தது என்றும் ’சூரரைப்போற்று’ படம் பிரபல விமான நிறுவனரின் வாழ்க்கை வரலாறு என்ற நிலையில் அந்த வாழ்க்கை வரலாறு அப்படியே எடுத்து விடாமல் பல மாற்றங்களை சூர்யா செய்ததாகவும் அதனால் அவர் அதனால் அந்த படம் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ’புறநானூறு’ படத்தின் கதையிலும் சூர்யா தலையிட்டு வருவதை அவருக்கு அதிருப்தியை அளித்தது என்றும் அதனால் தான் இந்த படத்தின் படப்பிடிப்பை அவர் தள்ளி வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது ’புறநானூறு’ படத்தின் குழுவினர்களிடமிருந்து வந்த ரகசிய தகவலின் படி இந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சூர்யா ’அயலான்’ இயக்குநர் ரவிக்குமார், பாலிவுட்டில் ’கர்ணா’ லோகேஷ் கனகராஜின் ’ரோலக்ஸ்’ போன்ற படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதை பார்க்கும் போது ’புறநானூறு’ படம் டிராப்பாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- actor suriya
- actor surya
- kaappaan suriya
- kanguva suriya
- kanguva suriya 42
- rolex suriya
- suriya
- suriya 42
- suriya 42 kanguva
- suriya 43
- suriya 43 movie
- suriya 43 update
- suriya and jyothika
- suriya jyothika
- suriya jyotika
- suriya kanguva
- suriya latest movie
- suriya latest news
- suriya latest video
- suriya mass entry
- suriya missed movies
- suriya movies
- suriya next movie
- suriya sivakumar
- suriya tamil songs
- suriya update
- suriya with family
- Surya