ப்ளூ சட்டை மாறனை விட பயங்கரமா பார்ப்பாங்க – சூர்யாவின் ‘கருப்பு’ பற்றி ஆர்.ஜே. பாலாஜி

Karupu

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டதாகவும், முழுப் படத்தையும் பார்க்கும்போது தனக்குப் பிடித்திருந்ததாகவும் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் தெரிவித்த கருத்து குறித்து ஆர்.ஜே. பாலாஜி பேசியிருக்கிறார்.

“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் ஆகியோர் ப்ளூ சட்டை மாறனை விடப் பயங்கரமாப் (விமர்சன ரீதியில்) பார்ப்பாங்க. அவங்களே படத்தைப் பார்த்துவிட்டு ‘ஹா.. நிம்மதியா இருக்கு’ என்று சொன்னார்கள்.”

படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், டீசரைப் போலத்தான் படமும் இருக்கும் என்றும் ஆர்.ஜே. பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version