karthik siva kumar 085421709 original sixteen to nine
சினிமாபொழுதுபோக்கு

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸில் நீடிக்கும் சிக்கல்: ஞானவேல்ராஜாவின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Share

நடிகர் கார்த்தி நடித்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பான சிக்கலில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாகத் தடை விதித்திருந்தது.

இந்தத் தடையை நீக்கக் கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.

கடந்த டிசம்பர் 12-ஆம் திகதி வெளியாக வேண்டிய இந்தப் படம், சட்டச் சிக்கல்களால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பால், சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை (கடனைத் திருப்பிச் செலுத்துவது) நிறைவேற்றினால் மட்டுமே படம் திரைக்கு வரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...