rajinikanth 660567b485884 1
சினிமாசெய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவர் 171’: மாஸ் அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

Share

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவர் 171’: மாஸ் அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக இருப்பதாகவும் இம்மாதத்திற்குள் திரைக்கதை எழுதும் பணியை முடித்துவிட்டு அதன் பின்னர் நட்சத்திர தேர்வில் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 22ஆம் தேதி ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்துள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் குதித்து வருகின்றனர். ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், அனிருத் மற்றும் அன்பறிவ் ஆகியோர்கள் இணையும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த வரும் ’வேட்டையன்’ படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்தடுத்த வாரம் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...