அதிரடியாக வந்தது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்- என்ன விஷயம்

228812 thumb 665

அதிரடியாக வந்தது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்- என்ன விஷயம்

துணிவு படத்தை முடித்த கையோடு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படம் நடிப்பதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் அவர்களது கூட்டணி அமையவில்லை, அதன்பிறகு அஜித் தேர்வு செய்த இயக்குனர் தான் மகிழ்திருமேனி.

இவர்களது கூட்டணியில் விடாமுயற்சி என்ற படம் தயாராகி வருகிறது, படத்திற்கான பாத படப்பிடிப்பு அஜர்பைஜானில் தான் நடந்துள்ளது.

அதிலும் அங்கு ஆரவ் மற்றும் அஜித் இடம்பெறும் ஒரு கார் காட்சியின் போது அவர்களுக்கு விபத்து ஏற்பட்ட வீடியோ வெளியாக ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

இப்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புகளும் அவ்வப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் நிலையில் அஜித் தனது அடுத்த பட இயக்குனரையும் தேர்வு செய்துவிட்டார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் அஜித் நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைத்துள்ளனர், தற்போது இந்த புதிய படத்தின் பூஜை இன்று நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் பூஜையின் புகைப்படம் வெளியாகுமா, அஜித் வந்திருப்பாரா என பல கேள்விகளுடன் அடுத்த அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version