அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து கலகலப்பு 3-யை இயக்கப்போகும் சுந்தர் சி.. ஹீரோஸ், ஹீரோயின்ஸ் யார் தெரியுமா

24 66385eaf7d10e

அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து கலகலப்பு 3-யை இயக்கப்போகும் சுந்தர் சி.. ஹீரோஸ், ஹீரோயின்ஸ் யார் தெரியுமா

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் அரண்மனை 4. முதல் நாளில் இருந்து மக்களிடையே நல்ல வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது. இதன்மூலம் இயக்குனர் சுந்தர் சி மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார்.

அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கப்போகும் திரைப்படம் தான் கலகலப்பு 3. நாம் அனைவரும் அறிவோம் கலகலப்பு திரைப்படம் எவ்வளவு பெரிய ஹிட் என்று. இப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளை இன்று பார்த்தாலும் நாம் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.

ஆனால், இதை தொடர்ந்து வெளிவந்த கலகலப்பு 2 எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் கலகலப்பு 3 படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் சுந்தர் சி.

இப்படத்தில் முதல் பாகத்தின் ஹீரோக்களாக நடித்த மிர்ச்சி சிவா மற்றும் விமல் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இதை சமீபத்திய பேட்டியில் உறுதி செய்தார் சுந்தர் சி. ஆனால் இப்படத்தில் நடிக்கப்போகும் கதாநாயகிகள் யார் யார் என்று இதுவரை அவர் கூறவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

கலகலப்பு 3 உருவாகுகிறது என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

Exit mobile version