ஸ்டார் படத்தின் 6 நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஸ்டார். கவின் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை இளன் இயக்கியிருந்தார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாள் நல்ல ஓப்பனிங்கை பெற்றது. இதை தொடர்ந்து முதல் வாரத்தின் இறுதியிலும் எதிர்பார்த்ததை விட ஸ்டார் திரைப்படத்தில் நல்ல வசூல் கிடைத்துள்ளது என்கின்றனர்.
இந்த நிலையில். ஸ்டார் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்டார் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 17.75 கோடி வரை வசூல் செய்துள்ளது என்கின்றனர்.
முதல் ஐந்து 5 நாட்களில் ஸ்டார் திரைப்படம் வசூல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், 6வது நாள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் குறைந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் ஸ்டார் படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்று.