ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பு ‘வாரணாசி’: ₹1100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மகேஷ் பாபுவின் கனவு!

25 691961aff0840

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், சுமார் ₹1100 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக ‘வாரணாசி’ உருவாகி வருகிறது. இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகர்கள்: இப்படத்தில் நடிகர்கள் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் எனப் பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். இப்படம் 2027ஆம் ஆண்டுதான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் விஎஃப்எக்ஸ் (VFX) தரம் ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் அமையலாம் எனத் தெரிகிறது. நிகழ்வில் பேசிய கதாநாயகன் மகேஷ் பாபு, ‘வாரணாசி’ திரைப்படம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

“வாரணாசி திரைப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான கனவு. நிச்சயம் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். குறிப்பாக, என் இயக்குநர் ராஜமௌலியையும் பெருமையடைச் செய்வேன். வாரணாசி வெளியாகும்போது எங்களை நினைத்து இந்தியாவே பெருமையடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version