சமந்தா இடத்தில் ஸ்ரீலீலா.. ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சமந்தாவின் நடனம் அப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரித்தது.
எங்கு திரும்பினாலும் ஊ சொல்றியா மாமா என்கிற பாடல் தான் ஒலித்துக்கொண்டே இருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்பாடல் உலகளவில் கொண்டாடப்பட்ட நிலையில், புஷ்பா 2 படத்திலும் அதே போல் ஒரு பாடலை இசையமைத்துள்ளார்.
ஆனால், அந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நேற்று படக்குழு வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், சமந்தாவிற்கு பதிலாக பாடலுக்கு நடனமாடியுள்ள நடிகை ஸ்ரீலீலா அதற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, புஷ்பா 2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. முன்னதாக புஷ்பா 1 படத்தில் நடனமாட நடிகை சமந்தா ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.