XMMHL8Og
சினிமாபொழுதுபோக்கு

பராசக்தி டிரெய்லர் வெளியீடு: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் சிவகார்த்திகேயன் – பொங்கலுக்கு நேரடி மோதல்!

Share

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வருகிறது.

1960-களின் தமிழகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், குறிப்பாக 1964-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய தொடருந்து (Railway) நிலையத்தில் நிலக்கரி அள்ளும் தொழிலாளியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆரம்பத்தில் போராட்டங்களில் ஈடுபடத் தயங்கும் அவர், பின்னர் மாணவர் சக்தியுடன் இணைந்து போராட்டத்தை வழிநடத்தும் காட்சிகளை முன்னோட்டம் காட்டுகிறது.

“நாங்கள் ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல; ஹிந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள்” என சிவகார்த்திகேயன் பேசும் வசனம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் தம்பியாக அதர்வா முரளியும், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா ‘ரத்னமாலா’ எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) இப்படத்தில் வில்லனாகத் தோன்றுவது எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100-வது திரைப்படமாகும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது. தளபதி விஜய்யின் இறுதிப் படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ (ஜனவரி 9) படத்துடன் ‘பராசக்தி’ நேரடியாக மோதவுள்ளது.

அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்தத் திரைப்படம், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் எனத் திரையுலக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
l90820260105150245
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் டிக்கெட் விலை கோவில்பட்டியில் கிளம்பிய சர்ச்சை; அதிகாரிகளிடம் புகார்!

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு வெளியாகும் அவரது கடைசித் திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படத்திற்குப்...

image 406706b76f
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் ரிலீஸில் சிக்கல்: தணிக்கை சான்றிதழ் தாமதத்தால் ரசிகர்கள் ஏமாற்றம் – என்ன நடக்கிறது?

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில...

26 695a97d4bf708
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? வெளியானது நட்சத்திரங்களின் ஊதிய விபரங்கள்!

இயக்குநர் எச்.வினோத் விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை...

126285772
பொழுதுபோக்குசினிமா

எனக்கு ஜோடி கிடையாது: மூன்வாக் படத்தில் நடிகராகக் களம் இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!

பிரபுதேவா நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘மூன்வாக்’ (MOONWALK) திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு...