8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

Share

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிஜு மேனன், விக்ராந்த், வித்யுத், சபீர் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் வெளிவரும் அதே நாளில் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படமும் வெளிவரவுள்ளது. இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் தயாராகியுள்ள இப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயனின் மதராஸி மற்றும் துல்கரின் காந்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவரவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...