பிரச்சனையில் சிக்கிய முத்து.. உண்மையை கண்டுபிடித்த மீனா! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கபோவது இதுதான்
சின்னத்திரையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யில் நம்பர் 1 சீரியல் என சாதனை படைத்திருக்கும் இந்த சீரியலில் கதாநாயகன் முத்து எதிர்பாராமல் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
கதாநாயகன் முத்துவிற்கும், சிட்டி என்பவருக்கும் எப்போதுமே ஆகாது என்பதே சீரியல் பார்ப்பவர்கள் அறிவார்கள். முத்துவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த சிட்டிக்கு சரியான சந்தர்ப்பம் அமைந்தது.
அதை பயன்படுத்தி தனது சதி வலையில் முத்துவை சிக்க வைத்துள்ளார். இதனால் குடித்துவிட்டு வண்டி ஓட்டும் டேக்சி ட்ரைவர் என்ற கெட்ட பெயர் ஊர் முழுக்க முத்துவிற்கு ஏற்படுகிறது.
இதனால் முத்துவை இதுவரை நம்மிக்கொண்டிருந்த தந்தை அண்ணாமலை கூட, முத்துவை அடித்துவிட்டார். தன்னை யாரும் நம்பவில்லை என உடைந்துபோகிறார் முத்து. இந்த நிலையில், தனது கணவர் முத்து யார் இப்படி சிக்க வைத்தது என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளார் மீனா.
சிட்டி தான் முத்துவை தவறான ஆளாக ஊர் உலகத்திற்கு சித்தரித்துள்ளார் என்றும், உண்மையிலேயே தனது கணவர் எந்த ஒரு தப்பும் செய்யவில்லை என்பதையும் கண்டுபிடிக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
- #siragadikka asai
- aaha kalyanam
- chinna marumagal
- kathir
- pandian stores
- redefining entertainment
- Siragadikka Aasai
- siragadikka aasai serial today episode | 4th may 2024 - vijay tv
- siragadikka asai serial today episode 04th
- siragadikka asai today 04th
- siragadikka asai today episode promo 04/5/24
- star
- star vijay tv
- today episode siragadikka asai 04th