சினிமாசெய்திகள்

விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி..? குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன..?

Share
9 scaled
Share

விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி..? குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன..?

தமிழ் சினிமாவில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகியவர் தான் சின்மயி. அந்தப் படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. இதனை அடுத்து இவர் தென்னிய மொழிகளில் பல பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.

மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போட்ட பதிவு ரசிகர்களை பெரும் குழப்பில் ஆழ்த்தியது. அத்தோடு தொடர்ந்தும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த சின்மயி சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.

பல சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதோடு இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ளார்.

இந்நிலையில் சின்மயி தற்போது எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது இவர் நேற்று மாலை தன் இரட்டைக் குழந்தைகளுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சின்மயியின் காரில் மோதியதாகவ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது “தற்போது தன் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், இந்த விபத்து தொடர்பாக தான் காவல்துறைக்கு அறிவிக்கவில்லை எனவும் ” அவர் கூறியுள்ளார். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டாதீர்கள் எனவும் அப்பதிவின் மூலமாக அட்வைஸ் பண்ணியும் உள்ளார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...