சிம்புவின் “மாநாடு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

New Project 13

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை பாதியாக குறைத்து, செம்ம ஸ்டைலிஷாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று முற்பகல் மாநாடு ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Exit mobile version