லோகி குடும்பத்தில் கும்மி அடித்த ஸ்ருதிஹாசன் .. எப்படி இருந்த குடும்பம் இப்படி ஆயிருச்சே..!
லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’இனிமேல்’ என்ற ஆல்பம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும், யூடியூபில் இந்த ஆல்பம் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆல்பம் காரணமாக லோகேஷ் கனகராஜ் வீட்டில் ஒரு புயல் கிளம்பி உள்ளதை அடுத்து லோகி வீட்டில் ஸ்ருதிஹாசன் கும்மி அடித்து விட்டார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ ஆகிய தொடர்ச்சியான ஐந்து வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர். முதலில் குறும்படங்களை இயக்கிய அவர், கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த ஊக்கம் காரணமாக சினிமாவுக்கு வந்தார். அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி ’மாநகரம்’ படத்தின் இயக்குனர் வாய்ப்பை பெற்றார்.
தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் உள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் உடன் அவர் நடித்த ’இனிமேல்’ என்ற ஆல்பம் அவரது வீட்டில் புயலை கிளப்பி உள்ளதாகவும் ஸ்ருதிஹாசன் உடன் அவர் காட்டிய நெருக்கம் குடும்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் லோகேஷ் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட தம்பதிகள் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை வர வாய்ப்பே இல்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.
இதுவரை லோகேஷ் கனகராஜ் தனது மனைவியை பொதுவெளியில் காட்டவில்லை என்பதும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூட அவரது மனைவியை பார்த்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
- director lokesh kanagaraj
- leo lokesh kanagaraj
- Lokesh Kanagaraj
- lokesh kanagaraj car
- lokesh kanagaraj interview
- lokesh kanagaraj interview vikram
- lokesh kanagaraj kamal haasan
- lokesh kanagaraj movies
- lokesh kanagaraj speech
- lokesh kanakaraj about kaithi 2
- lokesh kanakaraj all movie list
- lokesh kanakaraj family
- lokesh kanakaraj first movie
- lokesh kanakaraj interview
- lokesh kanakaraj short films
- lokesh kangaraj
- thalapathy 67 lokesh kanagaraj
Comments are closed.