புயல் மழையில் ஷிவானி நாராயணன் செய்த காரியம் .. கோபமாக விளாசும் நெட்டிசன்கள்
நடிகை ஷிவானி நாராயணன் சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனதா விட இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள் பதிவிட்டு தான் அதிகம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
அதன் பின் பின் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட அவர் அதில் இருந்து வெளியில் வந்த பிறகு சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
கடந்த சில தினங்களாக மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கி மொத்த நகரத்தையும் தண்ணீரில் மூழ்க செய்துவிட்டது. அந்த புயல் மழையில் ஷிவானி நாராயணன் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். மக்கள் புயலில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு வீடியோ தேவையா என விளாசி வருகின்றனர்.