கமலுக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. படப்பிடிப்பில் கைகலப்பு
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் கமல் ஹாசனுக்கு பிரபல ஒளிப்பதிவாளருடன் படப்பிடிப்பில் சண்டை வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவர் நடிகர் கமலை படப்பிடிப்பு தளத்தில் அடிக்க சென்றுள்ளார்.
இதனால் நடிகர் கமலுக்கு ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவரை சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம். ஆனால், அந்த ஒளிப்பதிவாளரை பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் திருமணம் செய்துகொண்டுள்ளார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ்.
இவர் நடித்த ஒரு படத்திற்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்போது நீ என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் நாம் இறந்துவிடுவேன் என கூறி நடிகை சாந்தியை திருமணம் செய்துகொண்டுள்ளார் வில்லியம்ஸ். அப்போது நடிகை சாந்திக்கு 19 வயது, வில்லியம்ஸுக்கு 46 வயது.
திருமணத்திற்கு பின் கணவர் வில்லியம்ஸ் இடம் இருந்து பல துன்புறுத்தல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார் சாந்தி வில்லியம்ஸ். இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறினார். மேலும் கமல் ஹாசனுடன் இணைந்து பணியாற்றிய விஷயங்கள் குறித்தும் பேசினார்.
ஆரம்பகால கட்டத்தில் கமல் ஹாசனிடம் தான் நடனம் கற்றுக்கொண்டாராம் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இதன்பின் இருவரும் இணைந்து படங்களில் நடனமாடியுள்ளனர். ஆகையால் தனது நடன குருவாக கமல் ஹாசனை பார்க்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.
மேலும் கமல் என்றாலே சாந்தி வில்லியம்ஸுக்கு எப்போதுமே பயம் தானாம். தன்னை எங்கு பார்த்தாலும், ஏய் என்னடி எப்படி இருக்க என்று தான் கமல் கேட்பாராம். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் பாபநாசம் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சாந்தி வில்லியம்ஸ் நடித்துள்ளார்.
அப்போது அந்த படப்பிடிப்பில் “வணக்கம் மாஸ்டர் ஜி என்று பயந்தபடியே சொன்னேன். அதற்கு கமல்ஹாசன் நீ என்னடி இப்பவும் பயப்படுற.. உனக்கும் வயசு ஆயிடுச்சு, எனக்கும் வயசாயிடுச்சு ஏன் இன்னும் என்னை பார்த்து பயப்படுற என்று கிண்டல் செய்தாராம். அதோடு நீ இந்த மாஸ்டர் ஜினு கூப்பிடுறத விட மாட்டியான்னு” என்றும் கேட்டுள்ளார் கமல். இந்த விஷயங்களை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Actress
- breaking news
- cinema
- Cinema News
- cinema news tamil
- cinema one
- cinema one originals
- cinema seithigal
- kapamilya news
- kerala news
- kollywood news
- latest news
- latest tamil cinema news
- latest tamil news
- live news
- manorama news
- News
- news tamil Kamal Haasan
- pinoy showbiz news
- tamil actors news
- tamil cinema
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil cinema news viral
- tamil live news
- Tamil news
- today tamil news
- trending news
- viral news
Comments are closed.