4 15 scaled
சினிமா

வேள்பாரி குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஷங்கர்.. தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்ட படைப்பு

Share

வேள்பாரி குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஷங்கர்.. தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்ட படைப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் நாளை வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியன் 3 படமும் விரைவில் வெளிவரவுள்ளது.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக ராம் சரணின் கேம் ஜேஞ்சர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவந்தது என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கரிடம், வேள்பாரி படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷங்கர் ” அந்தக் கதையை நிறைய பேர் என்னை படிக்க சொன்னாங்க. அந்த நேரத்துல எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கொரோனா வந்ததுக்கு பிறகு வீட்டுல சும்மா இருந்த நேரத்துல படிக்கலாம்னு ஆரம்பிச்சேன்”.

“படிக்க படிக்க என் மனசுல காட்சிகளா விரிந்தது . படிச்சு முடிச்சதுமே இதை எப்படியாவது படமா பண்ணணும்னு தோணுச்சு. உடனே அதை எழுதிய சு.வெங்கடேசன்கிட்ட பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கிவிட்டேன். வேள்பாரி 3 பாடங்களாக திரைக்கதை எழுதி முடிச்சுட்டேன். ரெடியா இருக்கு. யார் நடிக்கிறாங்க என்பதை முடிவு பண்ணல” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
15384441 newproject97
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் இணையும் எச்.வினோத்: இசையமைப்பாளராக சாம் சி.எஸ். உறுதி!

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத், தனது அடுத்த...

25 694a3cc6694cc
பொழுதுபோக்குசினிமா

படைத்தலைவன்’ படத்தைத் தொடர்ந்து ‘கொம்புசீவி: கேப்டன் மகனின் அடுத்த அதிரடி!

மறைந்த நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்...

44528881 6
பொழுதுபோக்குசினிமா

ரிலீஸிற்கு முன்பே சாதனை: ‘ஜனநாயகன்’ படத்தின் வெளிநாட்டு முன்பதிவு 4 கோடியைக் கடந்தது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின்...

maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...