கண்ணீர் விட்டு கதறிய ஷாருக்கான் மகன்! – தொலைபேசியில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

aryan han

ஷாருக்கானின் மகனுக்கு ஒக்டோபர் 11 வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய
ஆதாரங்கள் கிடைத்துள்ளன என போதைப்பொருள் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்றுமுன்தினம் சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு   தகவல் கிடைத்தது.

25க்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல கப்பலில் சென்றனர்.

நடுக்கடல் அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, 2 பெண்கள் உட்பட 8 பேரை கைதுசெய்தனர். அவர்களில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவராவர்.

கைதுசெய்யப்பட்ட 8 பேரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் மும்பைக்கு அழைத்துவரப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு
செய்து, நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது சாருக்கானின் மகனை ஒக்டோபர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க
போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோரியது.

ஆர்யனின் அனைத்து பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவரது தொலைபேசியை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியதால் மும்பை திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் ஷாருக்கானின் மகன் ஆர்யன் மீது போதைப்பொருளை உட்கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதையடுத்து ஆர்யன் போதைப்பொருள் வைத்திருக்கவில்லை என்று அவரது சட்டத்தரணி வாதிட்டார்.
அத்தோடு மும்பை உச்ச நீதிமன்றத்தில் ஆர்யனை பிணையில் விடுவிக்கக் கோரி மனுவொன்றும்;
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் விசாரணையின் போது ஆர்யான் கான் கண்ணீர் விட்டு அழுதார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Exit mobile version