பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே ஆண்டில் வெளிவந்தது.
இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. டங்கி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
ஷாருக்கான் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா! இத்தனை கோடியா | Shah Rukh Khan Watch Price
அடுத்ததாக தனது மகளுடன் இணைந்து ஷாருக்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் Met gala பேஷன் ஷோ நடைபெற்றது. இதில் ஷாருக்கான் கலந்துகொண்டார். அந்த விழாவில் ஷாருக்கான் தனது கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஷாருக்கான் அணிந்திருந்த இந்த வாட்ச் விலை ரூ. 24 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.