tamilni 23 scaled
சினிமா

சீரியல் நடிகை ரேகா நாயர் காரால் பரிதாபமாக உயிரிழந்த நபர்… பரபரப்பு சம்பவம்

Share

சீரியல் நடிகை ரேகா நாயர் காரால் பரிதாபமாக உயிரிழந்த நபர்… பரபரப்பு சம்பவம்

இரவின் நிழல், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர்.

இவர் இரவின் நிழல் படத்தில் மேலாடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஒருமுறை தன்னைப்பற்றி தவறாக பேசியதாக கூறி வாக்கிங் சென்ற நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் நடு ரோட்டில் சண்டையில் ஈடுபட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் எம்எல்ஏ ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார் என்ற சர்ச்சையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய காரை சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார் ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது அந்த கார் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான வாகனத்தை பறிமுதல் செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
15 7
சினிமாபொழுதுபோக்கு

விஜய் குறித்த சர்ச்சை: தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில்...

30 1
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் ரிலீஸ்: தமிழகத் தேர்தலுக்குப் பிறகு வெளியீடு!

நடிகர் விஜய்யின் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்)...

29 1
பொழுதுபோக்குசினிமா

நடிகர் விஜய் – த்ரிஷா ஒன்றாகத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு: சமூக வலைத்தளங்களில் விவாதம்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற...

20 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில்...