கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் சீமந்தம்

tamilni 152

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் சீமந்தம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் காயத்ரி யுவராஜ்.

அதன்பின் அழகி, பிரியசகி, மோகினி, அரண்மனை கிளி, களத்து வீடு, நாம் இருவர் நமக்கு இருவர், மீனாட்சி பொண்ணுங்க என தொடர்ந்து பல தொடர்கள் நடித்து வருகிறார்.

ஜோடி நம்பர் 1, Mr&Mrs சின்னத்திரை போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.

இவர் நடனக் கலைஞர் யுவராஜை திருமணம் செய்துகொண்டார், ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் காயத்ரி தான் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். தற்போது அவருக்கு கோலாகலமாக சீமந்தம் நடந்துள்ளது, அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

 

Exit mobile version