விக்ரமின் சாமி படத்தில் வில்லனாக நடித்த நடிகரா இது?. நடக்க கூட முடியாமல் இருக்கும் பிரபலம், வீடியோ இதோ
நடிகர் விக்ரமின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஹிட்டான படமாக அமைந்தது சாமி.
கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் வெளியான இப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். விக்ரம்-த்ரிஷா ஜோடியாக நடித்த இப்படத்திற்கு ஹாரிஸ்ஜெயராஜ் தான் இசை.
இதில் நாயகனுக்கு சரியான வில்லனாக பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தில் கோடா ஸ்ரீநிவாஸா ராவ் நடித்திருப்பார்.
தெலுங்கில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ள இவர் தமிழில் சாமி படத்தை தாண்டி குத்து, திருப்பாச்சி, சத்யம், தலைவன் என நிறைய படங்கள் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கோடா ஸ்ரீநிவாஸ ராய் இன்று நடைபெற்று வரும் தேர்தலில் வாக்கு பதிவு செய்ய வந்துள்ளார்.
வாக்கு பதிவு செய்ய நடக்க முடியாமல் அவர் பூத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக ரசிகர்கள் வில்லன் நடிகரா இது என வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.