மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளராக பணியை துவங்கியவர் சந்தோஷ் நாராயணன். அதன்பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தில் இசையமைப்பாளராக தனது பயணத்தை துவங்கினார்.
முதல் படமே வெற்றிக்கொடுக்க பீட்சா, சூது கவ்வும், மெட்ராஸ், 36 வயதினிலே, இறுதிச்சுற்று, கபாலி, காலா, வட சென்னை என பல படங்களுக்கு இசையமைத்து அதன் மூலம் டாப் பிரபலமாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களுக்குத் இசையமைத்த சந்தோஷ், கல்கி 2898 AD படத்திற்கு இசையமைத்து பாலிவுட்டிலும் தனது பாதத்தை பதித்தார்.
கடைசியாக சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு அவர் இசையமைத்து இருந்தார். அதில் சில பாடல்கள் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று சந்தோஷ் தனது 41 – வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் இவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சந்தோஷ் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 1 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சந்தோஷ் சொத்து மதிப்பு ரூ. 22 கோடி முதல் ரூ. 25 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.