33 3
சினிமா

எனக்கும் ஆர்யாவிற்கும் சண்டை வரும்.. வெளிப்படையாக பேசிய நடிகர் சந்தானம்

Share

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் என்கிற முடிவை எடுத்து அதிலும் பல ஹிட் படங்களை கொடுத்தார். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் DD next level. வருகிற 16ம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷனில் சந்தானம் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர் ஆர்யா மற்றும் நடிகர் சந்தானம் கலந்துகொண்டனர். அப்போது ஆர்யா குறித்து சந்தானம் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ஆர்யாவும் நானும் நண்பர்களா இருக்கும் போது சண்டை வராது. அவன் தயாரிப்பாளரா இருக்கும்போது, எங்களுக்குள்ள சில நேரங்களில் சண்டைகள் வரும். சில நேரங்களில் ஆர்யா கோபித்துக் கொள்வான். ரொம்ப சண்டை ஆயிடுச்சின்னா நான் கிளம்பி ஈஷா போயிடுவேன். உடனே எனக்கு போன் அடிச்சு சத்குரு கிட்ட காசு வாங்கி கொடு என்று கேட்பான். அவர்கிட்ட எப்படிடா காசு வாங்க முடியும் என்று கேட்டா, நீ அங்க தானே போற அவர்கிட்ட காசு வாங்கி கொடுத்துவிட்டு ப்ரொடியூசர் என்று அவர் பெயர் போட்டுக்கோ என்று சொல்வான்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு...

36 1
சினிமா

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை நான் ஆனால்.. பாடகி கெனிஷா சொன்ன ரகசியம்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய...

35 3
சினிமா

ஷாருக்கான் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா!

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான்,...

34 3
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால்...