குழந்தை பெற்றுக்கொள்ள நான் மறுக்கவில்லை – சமந்தா

நடிகை சமந்தா அண்மையில் விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார்.

திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதை சமந்தா தவிர்த்து வந்தமையே நாக சைத்தன்யா-சமந்தா பிரிய காரணம் என சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின.

தன் மீதான வதந்திகளுக்கு மீண்டும் சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள சமந்தா

“ஆழ்ந்த பச்சாதாபம், அக்கறை மற்றும் பொய்யான கதைகள் மற்றும் பரப்பப்படும் வதந்திகளுக்கு  எதிராக என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி.   எனக்கு மற்றொருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற மறுப்பு தெரிவித்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி,   மற்றும் கருவை கலைத்தேன் என வதந்திகள் வந்தன.
விவாகரத்து மிகுந்த வலியையளித்துள்ளது அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு அவகாசம் அளிக்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து நான் என்னை பாதுகாத்துக்கொள்வேன். நான் உடைந்து விடமாட்டேன் என்று சமந்தா கூறியுள்ளார்.

 

Screenshot 20211008 174433 Facebook

Exit mobile version