தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளான சமந்தா மற்றும் தமன்னா ஆகியோரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடி நடந்திருப்பது தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அங்குள்ள வாக்காளர் பட்டியலில் நடிகைகள் சமந்தா, தமன்னா, ராகுல் ப்ரீத் போன்றோரின் பெயர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டு இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மோசடி நடந்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. சமந்தா மற்றும் தமன்னா ஆகியோரின் வாக்காளர் பட்டியலைப் போலியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.