ஹைட்ரஜன் பெராக்சைடு தொடர்பாக நடிகை சமந்தா போட்ட பதிவு… குவியும் கண்டனம்
தமிழ் சினிமா தனது பயணத்தை தொடங்கி பின் தெலுங்கில் சோலோ நாயகியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து இப்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளவர் நடிகை சமந்தா.
ரூ. 500க்கு சம்பளம் வாங்க தொடங்கி இப்போது பல கோடி வரை சம்பளம் பெறும் அளவிற்கு வளர்ந்த நடிகை சமந்தா பயணத்திற்கு பின்னால் நிறைய கஷ்டங்கள், பிரச்சனைகள் உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார். பூரணமாக இன்னும் அவர் குணமடையவில்லை என கூறப்படுகிறது.
அண்மையில் நடிகை சமந்தா, நெபுலைசர் கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன் ஒரு பொதுவான வைரலுக்கு மருத்துக் கொள்ளும் முன் ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள்.
அதில் ஒரு வழி ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்பது என குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்து லிவர் டாக் என்ற பெயர் கொண்ட மருத்துவர் ஒரு கண்டன பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், சுவாச வைரஸ் தொற்றுகளைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்கும்படி சமந்தா பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைஸ் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறது.
ஏனெனில் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியான ஒரு முற்போக்கான சமூகத்தில், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பெண்ணுக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்படும்.
அவருக்கு உதவியோ அல்லது அவரது குழுவில் சிறந்த ஆலோசகரோ தேவை என கண்டன பதிவு போட்டுள்ளார்.