சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

25 6860cb5917db7

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால் அது ‘குஷி’தான். அதன்பின் சிட்டாடல் வெப் தொடரில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் Rakt Bramhand – The Bloody Kingdom வெப் தொடரில் சமந்தா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சமந்தாவின் அடுத்த படம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இயக்குநர் ராஜ் நிடிமுருவை சமந்தா காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இப்படியொரு பேச்சு எழுந்துள்ளது. ஆனால், சமந்தா தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, தனது வாழ்க்கையில் நடக்கும் Routine ஆன விஷயங்களை புகைப்பட தொகுப்பாக அவ்வப்போது வெளியிடுவார். இதனை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று சமந்தா வெளியிட்டுள்ள புகைப்பட தொகுப்பு இந்த பதிவில் உள்ளது.

இதில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் உணவு சாப்பிட்டு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் ஜிம் ஒர்கவுட், போட்டோஷூட், போட்காஸ்ட், ட்ரீட்மெண்ட், புத்தகங்கள் ஆகியவற்றையும் இதில் பதிவு செய்துள்ளார்.

Exit mobile version