24 666012e3336c9
சினிமாசெய்திகள்

கிளாமர் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர்.. விவாகரத்தின் போது சமந்தா எடுத்த முடிவு

Share

கிளாமர் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர்.. விவாகரத்தின் போது சமந்தா எடுத்த முடிவு

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சமந்தா நடனமாடி இருப்பார்.

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சமந்தா ஆடிய நடனமும் ஒன்று. இந்த பாடலில் நடனமாட சமந்தாவிற்கு ரூ. 5 கோடி சம்பளம் தரப்பட்டது என தகவல்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இந்த பாடலில் நீ நடனமாட கூடாது என குடும்பத்தினரும், தோழிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாக சமந்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதில் அவர் பேசுகையில் “புஷ்பா படத்தில் நடனமாட வாய்ப்பு வந்தபோது நான் விவாகரத்து முடிவு எடுத்திருந்தேன். அந்த நேரத்தில் என்னிடம் எனக்கு தோழிகளும் சரி, குடும்பத்தினரும் சரி விவாகரத்து முடிவை அறிவிக்க போற நேரத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாட வேண்டாம் என கூறினார்கள்”.

“ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த பாடலில் நான் நடனம் ஆடினேன். அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதை அனைவரும் அறிந்தது தான்”.

“அந்த வாய்ப்பை நிராகரிக்க என்னிடம் எந்த காரணமும் இல்லை. எதற்காக நான் மறைக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் நான் நூறு சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால், அது எனக்கு ஒர்க் ஆகவில்லை” என பேசினார்.

இது பழைய தகவலாக இருந்தாலும் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போக்குவரத்துத் துறையை நவீனப்படுத்த ஜப்பான் உதவி: 8 நவீன பேருந்துகள் நன்கொடை!

இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து 8 தாழ்தளப்...

12 3
செய்திகள்இலங்கை

காலி கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிப்பு: கடல்சார் பாதுகாப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கேள்வி!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) அல்லது அதற்கு மிக அருகாமையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானியப்...

10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...