உயிருக்கு ஆபத்து.. கோடிக்கணக்கில் செலவு செய்து சல்மான் கான் என்ன வாங்கியுள்ளார் பாருங்க

2 28

உயிருக்கு ஆபத்து.. கோடிக்கணக்கில் செலவு செய்து சல்மான் கான் என்ன வாங்கியுள்ளார் பாருங்க

பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதால் அவருக்கு அளித்து வரும் போலீஸ் பாதுகாப்பை அரசு தற்போது அதிகரித்து இருக்கிறது.

கடந்த 13ம் தேதி பாபா சித்திக் கொலைக்கு பிறகு சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு லாரன்ஸ் பிஷ்நோய் என்ற கேங்ஸ்டர் கொலைமிரட்டல் விடுத்தது இருப்பது குறிப்பிடத்தக்கது.

Y+ பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதால் அவரை சுற்றி எப்போதும் 10 கமாண்டோ வீரர்கள், எக்கச்சக்க போலீஸ் என பாதுகாப்புக்கு இருப்பார்கள்.

இந்நிலையில் தனது பாதுகாப்புக்காக சல்மான் கான் 2 கோடி ருபாய் செலவு செய்து குண்டு துளைக்காத கார் வாங்கி இருக்கிறார்.

Nissan Patrol SUV காரை அவர் வெளிநாட்டில் இருந்து வரவைத்து இருக்கிறாராம்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சல்மான் கான். அதன் செட்டில் கூட போலீஸ் அதிகமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம்.

 

Exit mobile version