விஜய், அஜித்துக்கு நோ சொன்ன நடிகை சாய் பல்லவி.. காரணம்

12 16

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

இதன்பின் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாரி 2, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்து வந்தார். சோலோ ஹீரோயினாக கார்கி என்கிற படத்தில் நடித்தார். மேலும் கடந்த ஆண்டு அமரன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கும் சாய் பல்லவி தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். குறிப்பிட்ட சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய் பல்லவி தனது திரை வாழ்க்கையில் நிராகரித்து திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய்யின் லியோ திரைப்படத்தில் த்ரிஷா நடித்த கதாநாயகி ரோலில் முதலில் நடிக்கவிருந்தது சாய் பல்லவி தான். ஆனால், அந்த கதாபத்திரம் தனக்கு ஏற்றதாக இருக்காது என கூறி, அப்படத்தை நிராகரித்துவிட்டாராம்.

அதே போல் அஜித்தின் வலிமை, விஜய்யின் வாரிசு ஆகிய படங்களில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவிருந்துள்ளார். ஆனால், அப்படங்களில் கதாநாயகி ரோலுக்கு பெரிதும் முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால் நிராகரித்துள்ளார்.

Exit mobile version