ருக்மணி வசந்துக்கு அடித்த ஜாக்பாட்.. VJS, SKவை அடுத்து மாஸ் நடிகரின் 2ஆம் பாகத்தில் வாய்ப்பு..!
நடிகை ருக்மணி வசந்த் ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் கன்னடத்தில் சில படங்களிலும் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்த நிலையில் விஜய் சேதுபதியின் 51 வது படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான கேரக்டர் என்பதால் இந்த படம் ரிலீஸ் ஆனால் ருக்மணிக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் சமீபத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் என்பதும் இந்த படம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் என்று கூறப்பட்டது. இந்த படத்தின் நாயகியாக பல முன்னணி நடிகைகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ருக்மணி வசந்த் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை அடுத்து தற்போது ரிஷப் ஷெட்டி நடித்து வரும் ’காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ருக்மணியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அனேகமாக இந்த படத்தில் அவர் கமிட் ஆகி விடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக சப்தமி கவுடா என்பவர் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் ருக்மணி வசந்த நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் ருக்மணி தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக மாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ’காந்தாரா 2’ படத்தில் நடிப்பதற்காக ருக்மணிக்கு ஒரு மிகப்பெரிய சம்பளம் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- rukmani vasanth
- rukmini
- rukmini vasanth
- rukmini vasanth about sse
- rukmini vasanth boyfriend
- rukmini vasanth instagram
- rukmini vasanth interview
- rukmini vasanth interviews
- rukmini vasanth kiss
- rukmini vasanth latest film
- rukmini vasanth love story
- rukmini vasanth marrigae
- rukmini vasanth movie
- rukmini vasanth movies
- rukmini vasanth news
- rukmini vasanth reaction
- rukmini vasanth shorts
- rukmini vasanth sueprb words
- rukmini vasnth