ஆர்.ஜே.பாலாஜி, சூர்யா இணையப்போகும் 45வது படத்தின் டைட்டில் என்ன?.. வலம் வரும் தகவல்
நடிகர் சூர்யா, தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் இப்போது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் கங்குவா.
சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் இறுதியில் நடக்கும் என கூறப்படுகிறது.
3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் உருவாக 38 மொழிகளில் டப் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
நவம்பர் 14ம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தான் நேற்று, அக்டோபர் 14, சூர்யாவின் 45வது படத்தின் அறிவிப்பு வெளியானது. Dream Warrior Pictures தயாரிக்க ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
தற்போது என்னவென்றால் சூர்யாவின் 45வது படத்தின் பெயர் கருப்பு என ஒரு தகவல் வலம் வருகிறது.
Comments are closed.