தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் தமன்னா, தனது ஆரம்பகால திரைப்பயணத்தில் எதிர்கொண்ட சவாலான ஒரு நிகழ்வை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
திரையுலகில் இரண்டு தசாப்தங்களைக் கடந்துள்ள தமன்னா, தனது 20 வயதில் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நேர்ந்த கசப்பான அனுபவத்தை விவரித்துள்ளார்
ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, தனக்கு அசௌகரியமான நெருக்கமான காட்சியில் (Intimate Scene) நடிக்குமாறு இயக்குனர் வற்புறுத்தியுள்ளார். அந்தக் காட்சியில் நடிக்க விருப்பமில்லை என்பதை இயக்குனரிடம் தமன்னா நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் எதிர்ப்பால் ஆத்திரமடைந்த இயக்குனர், படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவர் முன்னிலையிலும், “இந்தக் கதாநாயகியை மாற்றுங்கள்” என்று சத்தமிட்டுள்ளார். அந்தத் தருணத்தில் என்ன நடந்தாலும் எதிர்கொள்ளும் தைரியத்தை நான் பெற்றேன். மனம் தளராமல் உறுதியாக நின்றேன், என தமன்னா குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில், தனது தவறை உணர்ந்த அந்த இயக்குனர் தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த இயக்குனர் யார் அல்லது அது எந்தத் திரைப்படம் என்ற விபரங்களைத் தமன்னா ரகசியமாக வைத்துள்ள போதிலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அது குறித்த பல்வேறு ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது ஒரு சிறப்புப் பாடலுக்கு (Item Song) 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக தமன்னா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

