ரஜினியை முன்பு தாக்கி பேசிய பிரபலம்.. கூலி டீஸர் வந்ததும் இப்படி சொல்லிட்டாரே
சூப்பர்ஸ்டார் ரஜினி இதற்கு முன்பு சொன்ன காக்கா கழுகு கதை எவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என எல்லோருக்கும் தெரியும். ரஜினி தன்னை கழுகு என்றும் விஜய்யை காக்கா என்றும் கூறிவிட்டார் என பேசப்பட்டது.
கழுகு எவ்வளவு உயரமாக பறந்தாலும் கீழ தான் வந்தாகணும் என இயக்குனர் ரத்ன குமார் மேடையில் பேசியது சர்ச்சை ஆனது. அவர் ரஜினியை தான் தாக்கி பேசினார் என ரஜினி ரசிகர்கள் அவருடன் சண்டைக்கு போனார்கள்.
லோகேஷ் உடன் அவரது முந்தைய படங்களில் பணியாற்றிய ரத்ன குமார், ரஜினி படத்தில் பணியாற்றவில்லை.
தற்போது கூலி என இந்த படத்தில் டைட்டில் அறிவிக்கப்பட்டு, டீஸர் வைரலாகி வருகிறது. இந்த படத்தை பற்றி ட்வீட் போட்டிருக்கும் ரத்னகுமார், நிச்சயம் 1000 கோடி வசூலிக்கும் என பதிவிட்டு இருக்கிறார்.