tamilni 639 scaled
சினிமாசெய்திகள்

சூர்யாவுடன் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா. இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

Share

சூர்யாவுடன் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா. இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவை படக்குழுவினர் தொடர்பு கொண்ட போது அவர் மிகப்பெரிய தொகை கேட்டதாகவும் அதிலிருந்து ஒரு ரூபாய் குறைத்தால் கூட நடிக்க முடியாது என்று கூறியதாகவும் கசிந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 43’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ராஷ்மிகா மந்தனா நடிக்க தொடர்பு கொள்ளப்பட்டதாகவும் அவர் 3 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படத்தில் ஒரு சில லட்சங்கள் மட்டும் சம்பளம் வாங்கிய ராஷ்மிகா மந்தனா, விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடிக்கும் போது கூட ஒரு கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் வாங்கினார். ஆனால் சமீபத்தில் அவர் நடித்த ’அனிமல்’ என்ற ஹிந்தி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தனது சம்பளத்தை 3 கோடி முதல் 5 கோடி வரை அதிகரித்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் சூர்யா, சுதா கொங்கரா படத்திற்கு மூன்று கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு குறைந்து தன்னால் நடிக்க முடியாது என்று கறாராக கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ’சூர்யா 43’  பட குழுவினர் ராஷ்மிகா மந்தனா படத்திற்கே தேவை இல்லை என்று கூறிவிட்டு புதுமுக நடிகையை தேடி வருவதாகவும் ஒரு சில லட்சங்களில் புதுமுக நடிகைக்கு சம்பளம் கொடுத்தால் போதும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
07
செய்திகள்உலகம்

உக்ரைன் போரின் 4-வது ஆண்டு நிறைவு: புதினால் எங்களை உடைக்க முடியவில்ல – அதிபர் ஜெலென்ஸ்கியின் தீர்க்கமான உரை!

ரஷ்யா தனது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யைத் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன்...

06
செய்திகள்உலகம்

ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: காய்கறிச் சந்தையில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ரான் நாட்டின் மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan), அந்நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று...

05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...