வயநாடு மக்களுக்கு ராஷ்மிகா செய்த உதவி!! எத்தனை லட்சம் தெரியுமா?

tamilni Recovered Recovered

வயநாடு மக்களுக்கு ராஷ்மிகா செய்த உதவி!! எத்தனை லட்சம் தெரியுமா?

வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் நடிகர் விக்ரம் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version