ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பிப்ரவரியில் உதய்பூர் அரண்மனையில் நடக்கப் போகிறதா?

rashmika mandanna and vijay devarakonda marriage 2025 11 06 12 39 52

நடிகை ராஷ்மிகா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பல வருடங்களாகக் காதலித்து வரும் நிலையில், விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஷ்மிகா – விஜய் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், மோதிரமும் வைரலாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர்கள் திருமணம் எங்கே நடக்க இருக்கிறது என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பிப்ரவரி மாதம் ராஜஸ்தானின் உதய்பூர் அரண்மனையில் இந்தத் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

இருப்பினும், இது பற்றி ராஷ்மிகா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பு இதுவரை எந்த உறுதியான தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

Exit mobile version