ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் நடித்த படையப்பா, பாகுபலி போன்ற படங்கள் என்றுமே நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
ரம்யா கிருஷ்ணன் தற்போது 24 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுவும் ரஜினியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ரூ. 80 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
ஜெயிலர் திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த ரவி, சுனில், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.