நடிகர் ராமராஜனின் குடும்பத்தில் மரணம்.. நெருங்கிய உறவின் இழப்பு, அதிர்ச்சியில் குடும்பம்
திரையுலகில் கொடிகட்டி பரந்த உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ராமராஜன். எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இவர், முதலில் துணை இயக்குனராக தான் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்.
பின் ஹீரோவாக மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்ட ராமராஜன் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி ஹீரோவானார். சில திரைப்படங்களை தானே இயக்கி ஹீரோவாக நடித்து வந்தார்.
நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகளை உள்ளனர். 13 ஆண்டுகள் நீடித்த இவர்களுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.
நடிகர் ராமராஜனின் சொந்த ஊர் மதுரை. இவருடைய உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் என அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ராமராஜனின் அக்கா புஷ்பவதி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு வயது 75. உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த இவர், நேற்று மரணமடைந்துள்ளார்.
சகோதரியின் மரண செய்தியால் உடைந்துபோன ராமராஜன், தனது சொந்த ஊரான மதுரையில் உள்ள மேலூருக்கு உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளார். இன்று ராமராஜனின் அக்கா புஷ்பவதியின் இறுதி சடங்குகள் நடக்கவிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.