நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துள்ள ஜாக்கி பாக்னானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?
நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஆரம்பத்தில் தமிழ் சினிமாவி சில படங்கள் நடித்தார், ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அப்படியே டோலிவுட் பக்கம் சென்றவர் முன்னணி நடிகையாக வளர ஆரம்பித்தார்.
பின் கோலிவுட் பக்கம் மீண்டும் வந்தவர் சூர்யாவுடன் NGK, சிவகார்த்திகேயனுடன் அயலான் என படங்கள் நடித்தார்.பாலிவுட்டிலும் சில படங்கள் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இப்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஜாக்கி பாக்னானி, பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர், தொழிலதிபராகவும் இருக்கிறார். ரகுல் மற்றும் ஜாக்கி பாக்னானி இருவருக்கும் கோவாவில் நேற்று (பிப்ரவரி 21) கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருக்கும் ஜாக்கி பாக்னானியின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 41 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
Comments are closed.