தனுஷின் கர்ணன் பட நடிகை ரஜிஷாவிற்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை ஒளிப்பதிவாளரா, கியூட் ஜோடி
ரசிகர்களுக்கு பிரபலங்களின் திருமண செய்தி வந்தால் கொண்டாட்டம் தான்.
அப்படி இன்று ஒரு பிரபல நாயகியின் திருமண செய்தி தான் வந்துள்ளது. தமிழில் கர்ணன், ஜெய் பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை ரஜிஷா விஜயன்.
2021ம் ஆண்டு வெளிவந்த கர்ணன் திரைப்படம் தான் அவருக்கு முதல் தமிழ் படம், அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் வரவேற்பை பெற்றார்.
தமிழ் சினிமா வருவதற்கு முன் மலையாளத்தில் வெள்ளத்திரை மற்றும் சின்னத்திரையில் பணியாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை ரஜிஷா விஜயனுக்கு பிரபல ஒளிப்பதிவாளரான டோபின் தாமஸ் என்பவருடன் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இருவரும் அவ்வப்போது ஜோடியாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.