கலாநிதி மாறன் மகள் காவ்யாவை பார்க்கும் போது BP ஏறுது.. ரஜினி சொன்ன வார்த்தை! வெளுத்து வாங்கிய சம்பவம்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசினார்.
அதில் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா குறித்தும் பேசினார். IPL போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆவர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் போதெல்லாம் இவருடைய எக்ஸ்பிரஷன்ஸ் தான் இணையத்தில் வைரலாகும்.
இதுகுறித்து ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நல்ல வீரர்களை போடுங்க. போட்டி நடக்கும்போதெல்லாம் காவ்யாவின் எக்ஸ்பிரஷன்ஸ் பார்த்தா நமக்கே டென்ஷன் ஆகுது, பிபி ஏறுது” என நகைச்சுவையாக பேசியிருந்தார்.
ரஜினிகாந்த் பேசியதை தொடர்ந்து 2024ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஒவ்வொரு போட்டியிலும் புதுப்புது சாதனைகளை படைத்து வெற்றியை ருசித்து வருகிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட போது, அவர்களுக்கு எதிராக 277 ரன்களை இலக்காக வைத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதுவே IPL வரலாற்றில் அதிகமான ஸ்கோர் என சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தன. இதன்மூலம் ஏற்கனவே இருந்த தங்களுடைய டோட்டல் ஸ்கோர் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. மேலும் IPL பாயிண்ட்ஸ் டேபிளில் டாப் 4ல் இடம்பிடித்துள்ளது.
ரஜினிகாந்தின் பேச்சை தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இப்படி ஆடி வருகிறதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
- Aishwarya Rajinikanth
- aishwarya rajinikanth movie
- happy birthday rajinikanth
- hbd thalaivar rajinikanth
- jailer rajinikanth
- jinikanth
- lal salaam rajinikanth
- rajinikanth fans
- rajinikanth grand entry
- rajinikanth hits
- rajinikanth latest speech
- rajinikanth movie
- rajinikanth movies
- Rajinikanth news
- rajinikanth next movie
- rajinikanth songs
- rajinikanth speech
- rajinikanth speech latest
- rajnikanth
- Superstar Rajinikanth
- superstar rajinikanth speech